செய்திகள்
2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நவம்பர் மாதம் 8 இல்

2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
நவம்பர் 8ஆம் திகதி முதல் டிசெம்பர் மாதம் 8ஆம் திகதி வரையில் அதன் விவாதம் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான தீர்மானம் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் இந்த திகதி இறுதி செய்யப்படவில்லை என்றும், இன்னும் இரண்டு நாள்கள் விவாதத்துக்காக சேர்த்துக் கொள்ளப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.