விளையாட்டு

2021ஆம் ஆண்டுக்கான LPL தொடரை ஜஃப்னா கிங்ஸ் அணி வெற்றி கொண்டது!

2021ஆம் ஆண்டுக்கான லங்கா பிரிமியர் லீக் தொடரையும் ஜஃப்னா கிங்ஸ் அணி கைப்பற்றியது.

கோல் கிளேடியேட்டர்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஜஃப்னா கிங்ஸ் அணி 23 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜஃப்னா கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 03 விக்கெட்டுக்களை இழந்த ஜஃப்னா கிங்ஸ் அணி 201 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக அவிஷ்க பெர்னாண்டோ 63 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் சமித் படெல் 32 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

இந்நிலையில், 202 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கோல் கிளேடியேட்டர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 178 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

அணிசார்பில் அதிகபடியாக தனுஸ்க குணதிலக்க 54 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் ஜஃப்னா கிங்ஸ் அணியின் வனிந்து ஹசரங்க 30 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும், சதுரங்க டி சில்வா 15 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இதன்படி, ஜஃப்னா கிங்ஸ் இரண்டாவது முறையாகவும் லங்கா பிரிமியர் லீக் தொடரை கைப்பற்றியுள்ளது.

Related Articles

Back to top button