செய்திகள்

2021 ஆம் ஆண்டாகும் போது நாட்டில் காணப்படுகின்ற குடிசை வீடுகள் பொருத்தமான வீடுகளாக மாற்றி அமைப்பதற்கு நடவடிக்கை…

2021 ஆம் ஆண்டாகும் போது நாட்டில் காணப்படுகின்ற குடிசை வீடுகள் இல்லாமல் ஆக்கப்பட்டு மக்களுக்குப் பொருத்தமான வீடுகளாக மாற்றி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த –

2021 ஆம் ஆண்டாகும் போது நாட்டில் காணப்படுகின்ற குடிசை வீடுகள் இல்லாமல் ஆக்கப்பட்டு மக்களுக்குப் பொருத்தமான வீடுகளாக மாற்றி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.

" உங்களுக்கு வீடு – நாட்டிற்கு எதிர்காலம்" தேசிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் தற்போது நாடு முழுவதும் கட்டப்பட்டு வரும் 14,022 வீடுகளுக்கு மேலதிகமாக இன்னும் 14,022 வீடுகள் கட்டப்படும் என்பதோடு பொருளாதார புத்தழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் கெளரவ பஷில் ராஜபக்‌ஷவின் அறிவுறுத்தலின் பேரில் வீடமைப்பு, வீதிகள், சமுர்த்தி, கூட்டுறவு மற்றும் பெண்கள் விவகார அமைச்சுக்கள் ஒன்றிணைந்து மக்களின் வாழ்வாதாரத்தை பலப்படுத்தும் நோக்கில் தேசிய வேலைத்திட்டங்களைச் செயற்படுத்தும் பொறுப்பு எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

கெளரவ பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் பல புதிய வீட்டுத் திட்டங்கள் மக்களுக்கு ஒப்படைத்து வீடமைப்பு அமைச்சராக அடுத்த ஆண்டிலும் காலடி வைப்பேன் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

" உங்களுக்கு வீடு – நாட்டிற்கு எதிர்காலம்" தேசிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் கம்பஹா மாவட்டத்தில் நீர் கொழும்பு மற்றும் கம்பஹா பிரதேச செயலகப் பிரிவு ஆகிய பிரதேசங்களில் கட்டப்பட்ட 4 புதிய வீடுகளை பொதுமக்களுக்கு கையளிக்கும் வைபவத்தில் இன்று (24) கலந்து கொண்டு மேற்கண்டவாறு உரையாற்றினார்.

நீர் கொழும்பு பிரதேச செயலகப் பிரிவில் போலவலான, உடயாரதோப்புவ மற்றும் கம்பஹா பிரதேச செயலகப் பிரிவில் போகமுவ வடக்கு, கலஹிடியாவ தெற்கு ஆகிய பகுதிகளில் இந்த வீடுகள் திறந்து வைக்கப்பட்டன. மேலும் கம்பஹா பிரதேச செயலகப் பிரிவில் இம்புல்கொட கீழ் கிழக்கு பிரதேசத்தில் புதிய வீடு கட்டுவதற்கான அடிக்கல்லையும் அமைச்சர் நாட்டினார்.

அதி மேன்மை தங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் " சுபீட்சத்தின் நோக்கு"கொள்கைப் பிரகடனத்திற்கு இணங்க கெளரவ பிரதமர் மஹிந்த ராஜப்க்‌ஷவின் அறிவுறுத்தலின் பேரில் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் "மக்களுக்கு வீடு – நாட்டிற்கு எதிர்காலம்" தேசிய வீடமைப்பு வேலைத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வேலைத் திட்டத்தில் நாட்டிலுள்ள ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவுகளையும் உள்ளடக்கி 14,022 வீடுகளைக் கொண்டதாகும்.

Related Articles

Back to top button