செய்திகள்நுவரெலியாமலையகம்

2021 ஆம் ஆண்டின் இளம் வணிக முயற்சியாளர்களை தெரிவு செய்யும் நிகழ்ச்சி திட்டத்தில் மலையகத்தை சார்ந்த ராமசந்திரன் திருநிரைச்செல்வன் சந்துரு Vgo Delivery முதலாமிடம்..

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் Hope 4 Srilanka எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நடாத்தப்பட்ட 2021 ஆம் ஆண்டின் இளம் வணிக முயற்சியாளர்களை தெரிவு செய்யும் நிகழ்ச்சி திட்டத்தில் தேசியமட்டத்தில் முதல் இடத்தை Vgo Delivery பெற்றுக்கொண்டுள்ளது.

மலையகத்திலிருந்து இந்த தேசிய மட்டத்திலான போட்டி நிகழ்வில் கலந்துக்கொண்டு தேசிய மட்டத்தில் முதல் இடத்தை பெற்றுக்கொண்டது இளைஞர், யுவதிகளின் மறைந்திருக்கும் திறமைகளுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

இந்த பெருமையை மலையகத்துக்கு பெற்றுத்தந்த Vgo முயற்சியாண்மையின் நிறுவுனர் ராமசந்திரன் திருநிரைச்செல்வன் சந்துரு (Çhäñ Thîrû TL) மற்றும் Vgo அணியினருக்கும் இ தொ கா இளைஞர் அணியின் சார்பில் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற செயற்திட்டங்களுடன் 0706400000 எனும் வாட்சப் இலக்கத்தின் மூலம் தொடர்புகொள்ளவும் இளைஞர் யுவதிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது .

Vgo சேவைகளை பின்வரும் இணையதளத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம் .https://vgo.lkDownload:https://play.google.com/store/apps/details…Apple :https://apps.apple.com/lk/app/vgo-food-delivery/id1556987431

Related Articles

Back to top button