...
செய்திகள்

2022ஆம் ஆண்டில் அதிகளவு சுற்றுலாப்பயணிகளை கவர விசேட வேலைத்திட்டம் – பிரசன்ன ரணதுங்க

கொவிட்-19 சவாலுக்கு மத்தியிலும் அதிகமான சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் 2022ஆம் ஆண்டை “விசிட் ஸ்ரீலங்கா” எனும் ஆண்டாக அறிவிக்க சுற்றுலா அமைச்சு திட்டமிட்டுள்ளது.
1 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாத் துறைக்கு ஐந்தாண்டு உலகளாவிய தொடர்பாடல் உந்துதல் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இத்திட்டத்திற்கு அமைச்சரவை ஏற்கனவே அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் சுற்றுலா அமைச்சரான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
இந்த திட்டத்தை செயற்படுத்தவும் மேற்பார்வை செய்யவும் மற்றும் இந்த முயற்சிக்கு பங்களிக்கும் அனைத்து தொடர்புடைய நிறுவனங்களை ஒருங்கிணைக்கவும் ஒரு விசேட செயலகம் அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.இதற்கமைய, சமூக ஊடகங்கள் மற்றும் ஒன்லைன் மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் போன்றவைகளின் ஊடாக சுற்றுலா விளம்பரப் பிரசாரப் பிரிவு அமைக்கப்படவுள்ளது.
அதே நேரத்தில் ‘பிரசார உருவாக்கம், ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் முகாமைத்துவ பிரிவு’ம் அமைக்கப்படவுள்ளது.
மக்கள் தொடர்புகள் , உள்ளடக்க மேம்பாடு, சமூக ஊடகங்கள் மற்றும் இணைய ஊக்குவிப்பு ஆகியவற்றிற்கான 25 உள்ளூர் முகவர் நிறுவனங்கள் உருவாக்கப்படவுள்ளதுடன், இலக்கு மேம்பாட்டுக்கான எட்டு முகவர் நிலையங்கள் இதில் உள்ளடக்கப்படவுள்ளன.

Related Articles

Back to top button


Thubinail image
Screen