...
இராசிப்பலன்

2022-ன் கால சர்ப்ப தோஷம்; எச்சரிக்கையாக இருக்கவேண்டிய 4 ராசியினர்கள்.. செய்ய வேண்டிய பரிகாரம்;

இந்த ஆண்டின் 2022 முதல் ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிக்காரர்களுக்கு கடினமானதாக இருக்கப்போகிறதாம். அதில், இந்த 4 ராசிக்காரர்களுக்கு கால் சர்ப்ப தோஷம் சில சிரமங்களைத் தர உள்ளது, ஆனால் இதைப் பற்றி பீதியடைய தேவையில்லை, இதைத் தவிர்க்க ஜோதிடத்தில் சில முக்கிய பரிகாரங்களை மேற்கொண்டால் போதுமாம்.

காலசர்ப்ப தோஷம் என்ற பெயரைக் கேட்டாலே பலருக்கு மனதில் பயம் வரத் தொடங்குகிறது. காலசர்ப்ப தோஷம் கஷ்டங்களை மட்டுமே தரும் என்பது போன்ற ஒரு நம்பிக்கை மக்களிடையே உள்ளது.

ரிஷபம்

ரிஷப ராசியினர்களுக்கு 2022-ம் ஆண்டு ஜாதகத்தில் உருவாகும் காலசர்ப்ப யோகம் ரிஷப ராசியினருக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும். முதல் 3 மாதங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

இதனால் அவரது தாயாருக்கு உடல்நலக் குறைவு ஏற்படலாம். இது தவிர, இந்த ராசிகாரர்களின் முக்கிய பொருள் ஏதேனும் திருடப்படலாம் அல்லது ஏமாற்றப்படலாம், எனவே கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.

கன்னி

கன்னி ராசியினர்களுக்கு பகுதி விஷ யோகத்தை உண்டாக்குகிறது. வெளியில் சாப்பிடுவதை தவிர்க்கவும். ஏப்ரல்24, 2022 வரை உணவு மற்றும் பானங்களை எடுத்துக்கொள்வதில் கவனமாக இருக்கவும்.

நீங்கள் மதுப்பிரியர்கள் கவனமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

விருச்சிகம்

விருச்சிக ராசியினர்கள் மன உளைச்சல் ஏற்படலாம். மற்றவர்களின் எண்ணங்கள் உங்களை ஆதிக்கம் செலுத்த அனுமதிக்காதீர்கள், இல்லையெனில் நீங்கள் மனச்சோர்வுக்கு பலியாகலாம். குறிப்பாக 24 ஏப்ரல் 2022 வரையில் நேரம் மோசமாக இருக்கிறது.

மீனம்

மீன ராசியினர்களுக்கு, வித்தியாசமான அனுபவத்தை ஏற்படுத்தும். உங்களுக்கு அதிர்ச்சியூட்டும் அனுபவத்தை கொடுக்கும் . ஒருவரை நீங்கள் சந்திப்பீர்கள்.

அதேசமயம் ஒருவரைப் பிரியும் துக்கமும் ஏற்படலாம். எனவே சிறிது பொறுமையுடன் கையாள்வது நல்லது.

செய்ய வேண்டிய பரிகாரம்;

அரச மரத்தடியில் இருக்கும் விநாயகரை வணங்கி, அரசமரத்தடியில் இருக்கும் நாகர் சிலையை வழிபடலாம்.

காலை, மாலை என இருவேளையும் நாதஸ்வரத்தின் ஒலியை கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அது இந்த தோஷத்தில் இருந்து வரும் பாதிப்புகள் குறைவதற்கு வழிவகை செய்யும்.

கோவிலுக்கு தேவைப்படும் மணி உங்களால் முடிந்த அளவிற்கு எடை கனமாகவும், அருமையாகவும் செய்யப்பட்டுள்ள கோவில் மணியை வாங்கிக் கொடுத்தால் தோஷத்திலிருந்து நீங்க பெறுவதாக ஐதீகம் உள்ளது.  

Related Articles

Back to top button


Thubinail image
Screen