2022 ஆம் ஆண்டின் முதல் 5 மாதங்களில், 288,645 கடவுச்சீட்டுகளை விநியோகித்துள்ளது என குடிவரவு மற்றும் குடியகல்வு பிரதி கட்டுப்பாட்டாளர் தெரிவித்தார்.
பத்தரமுல்லையில் உள்ள திணைக்கள அலுவலகத்துக்கு கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதற்காக வருகை தரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள காரணத்தினால், நாளாந்தம், ஒரு நாள் சேவையின் கீழ், வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது.