HTML tutorial

இலங்கையில் விவசாயிகள் பெற்ற சிறு, சிறு விவசாயக் கடன்கள் நூறு வீதம் தள்ளுபடி செய்யப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செவ்வாய்க்கிழமை (07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

“சிறிய நிலங்களில் நெல் பயிரிடும் விவசாயக் குடும்பங்கள் மிகவும் நிலையில் இருப்பதை நாம் அறிவோம். இரண்டு ஹெக்டேருக்கும் குறைவான நிலம் உள்ள விவசாயிகள் பெற்ற விவசாய கடன்கள் 100 வீதம் தள்ளுபடி செய்யப்படும் என” பிரதமர் கூறினார்.