HTML tutorial

சுகாதார துறைக்கு தேவையான மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு தற்போது 450 மில்லியன் ரூபா அரசாங்கத்திடம் உள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு தேவையான பணம், பல்வேறு நன்கொடையாளர்கள் மற்றும் நிதியுதவி வழங்கக்கூடிய குழுக்களால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

வருடாந்தம் நாட்டுக்குத் தேவையான மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு சுமார் 260 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகின்றன. எனவே இன்னும் இரண்டு வருடங்களுக்கு மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு போதுமான அளவு பணம் இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், பற்றாக்குறையாக உள்ள மருந்துகளுக்கான கோரிக்கை வழங்கிய பின்னர், மருந்துகள் தயாரிக்கப்பட்டு இலங்கைக்கு வழங்குவதற்கு சிறிது காலம் ஆகலாம். இதனால் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மருந்துப் பொருட்கள் குறித்து சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்றும் அவர் கூறியுள்ளார் அந்த காலத்திற்குப் பிறகு மருந்துப் பொருட்கள் குறித்து நீண்ட காலப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பில்லை.

அத்துடன், பற்றாக்குறையாக இருந்த அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஏற்கனவே நாட்டுக்கு கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.