HTML tutorial

பாடசாலைகளுக்கும் விடுமுறை இன்றைய (13) தினம் விசேட அரசாங்க விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து வசதிகள் மற்றும் மின்சாரத் துண்டிப்புப்போன்ற பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அரச நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துளளது.

இருப்பினும் இந்த விடுமுறை அரச அத்தியாவசிய சேவைகளுக்குப் பொருந்தாது எனவும் குறிப்பிட்டுள்ளது. அரசாங்கத்தின் சகல பாடசாலைகள் மற்றும் அரச அனுமதியுடன் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கும் இன்று(13) விடுமுறை தினம் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.