சீன ஜனாதிபதி ஷி ஜிங்பின், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். யுக்ரேன் யுத்தம் தொடர்பில் இருவரும் கலந்துரையாடியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பேச்சுவார்த்தை மூலம் யுத்தத்தை நிறைவுசெய்ய சகல தரப்பினரும் முன்வரவேண்டுமென சீன ஜனாதிபதி, ரஷ்ய ஜனாதிபதியிடம் குறிப்பிட்டுள்ளார். எனினும் சீன ஜனாதிபதி யுக்ரேன் மீதான தாக்குதலை, ரஷ்யாவின் ஆக்கிமிப்பு எனவோ, அல்லது ரஷ்யா மீது கண்டனம் தெரிவிக்கவோ இல்லையென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பேச்சுவார்த்தைக்கு சீனா மத்தியஸ்தம் வகிக்க தயாரெனவும் ஜனாதிபதி ஷி ஜிங்பின், ரஷ்ய ஜனாதிபதியிடம் குறிப்பிட்டுள்ளார்.