HTML tutorial

இலங்கை இராணுவ மின் மற்றும் இயந்திரப் பொறியியலாளர்கள் (SLEME) படைப்பிரிவு, ஏழு 25 பவுண்டர் பீரங்கி துப்பாக்கிகளை புதுப்பித்து, பனாகொடவில் உள்ள இலங்கை பீரங்கி (SLA) படைப்பிரிவினருக்கு சம்பிரதாய நிகழ்ச்சிகளின் போது பயன்படுத்துவதற்காக சமீபத்தில் கையளித்தது.

மின் மற்றும் இயந்திரப் பொறியியலாளர்கள் (SLEME) படைப்பிரிவு துருப்புக்கள் அந்த பீரங்கிகளை புதுப்பித்ததன் மூலம் இராணுவத்திற்கு பாரியளவு நிதியை மீதப்படுத்த முடிந்துள்ளது என்று இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிகழ்வில் இலங்கை பீரங்கி (SLA) படைப்பிரிவின் கட்டளைத் தளபதியும் முல்லைத்தீவு பாதுகாப்புப் படைகளின் தளபதியுமான மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க, உட்பட பல சிரேஷ்ட அதிகாரிகளும் படையினரும் கலந்துகொண்டனர்