HTML tutorial

தேசிய கால்நடை அபிவிருத்தி சபைக்கு சொந்தமான பொலன்னறுவை கந்தகாடு விவசாயப் பண்ணையை எதிர்வரும் பெரும்போகப் பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்த விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.

கந்தகாடு பண்ணையின் 1,215 ஹெக்டேயரை இராணுவத்தினருக்கும், மேலும் 500 ஏக்கரை புனர்வாழ்வு திணைக்களத்திற்கும் வழங்குவதற்கு சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக விவசாய மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். விவசாய அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். மேலும், இலங்கை எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பற்றாக்குறையைக் குறைக்க அரசாங்கம் எடுத்த தீர்மானத்தின்படி கந்தகாடு விவசாயப் பண்ணையில் உள்ள 11,000 ஏக்கர் நிலங்களிலும் பயிர்ச் செய்கை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்