HTML tutorial

பசறை, சபுகஸ்கந்த மற்றும் எத்திமலே ஆகிய பகுதிகளில் எரிபொருளை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், 60 லீற்றர் டீசலுடன் 40 வயதுடைய ஒருவர் பசறை பிரதேசத்தில் நேற்று பொலிஸாரினால் சந்தேகத்தின்பேரில் கைது கைது செய்யப்பட்டுள்ளார்.

இவருக்கு, எதிர்வரும் 30ஆம் திகதி பசறை நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த நிலையில், பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும், சபுகஸ்கந்த இஹல பியன்வில பிரதேசத்தில் 460 லீற்றர் டீசலுடன் 48 வயதுடைய ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபர் இன்று மஹர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். இதேவேளை, 1220லீற்றர் பெற்றோலை பதுக்கி வைத்திருந்த 60 வயதுடைய நபர் ஒருவர் நேற்று எத்திமலை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று சியம்பலாண்டுவ நீதவான் நீதிமன்றம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட உள்ளார்.