HTML tutorial

இங்கிலாந்து கிரிக்கட் அணியின் ஒருநாள் மற்றும் ரி-20 கிரிக்கட் அணிகளின் தலைவர் இயன் மோர்கன், சர்வதேச கிரிக்கட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து கிரிக்கட் அணியை சம்பியனாக வரலாற்றில் இடம்பிடிக்கச் செய்த பெருமை இவரை சாரும், இங்கிலாந்து கிரிக்கட் வரலாற்றில் வரையறுக்கப்பட்ட ஓவர்களைக் கொண்ட போட்டிகளில் அணியை சிறந்த முறையில் வழிநடத்திய பெருமை இவரை சாரும். இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அலெஸ்ட்ரியா குக் 2015ஆம் ஆண்டில் பதவி விலகியதைத் தொடர்ந்து அணியின் தலைவராக இவர் பணியாற்றியுள்ளார். இயன் மோர்கன், இங்கிலாந்து கிரிக்கட் அணியில் 126 ஒருநாள் போட்டிகளிலும், 72 ரி-20 போட்டிகளிலும் தலைமை பொறுப்பேற்று வழிநடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.