ஜப்பானில் 150 வருடங்களின் பின்னர் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. 1875ம் ஆண்டுக்கு பின்னர் ஜப்பானின் வெப்பநிலை 35 பாகை செல்சியஸை தாண்டியுள்ளது. இசேசாகி நகரின் வெப்பநிலை 40 பாகை செல்சியஸாக பதிவாகியுள்ளது.
வெப்பநிலை அதிகரித்துள்ளதால் குளிரூட்டி போன்ற மின்சார உபகரணங்களின் பாவனையும் அதிகரித்துள்ளது. இதனால் தொடர்ச்சியான மின்சாரத்தை வழங்குவதில் தடைகள் காணப்படுவதாக ஜப்பான் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. இதனால் தேவையற்ற மின்குமிழ்களை அணைத்து வைக்குமாகு ஜப்பான் அரசாங்கம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.