வவுனியா, வாரிக்குட்டியூர் படிவம்-6 அருள்மிகு ஐயனார் திருக்கோயில்

0
25

வடமாகாணம் – வவுனியா மாவட்டம் – வவுனியா, வாரிக்குட்டியூர் படிவம்-6 அருள்மிகு ஐயனார் திருக்கோயில்

காவல் தெய்வமாயிருந்து காத்தருளும் ஐயனே
காலமெல்லாம் உடனிருந்து காத்தருள வேண்டுமைய்யா
துன்பங்கள் அண்டாது துடைத்தெறிய வந்திடைய்யா
வாரிக்குட்டியூர் கோயில் கொண்ட ஐயனாரே சரணடைந்தோம்

வன்னிப் பெருநிலத்தில் வந்தமர்ந்த ஐயனே
வழிதவறா நேர்வழியைத் தந்தருள வேண்டுமைய்யா
வழிகாட்டி நெறிப்படுத்தி வாழவைக்க வந்திடைய்யா
வாரிக்குட்டியூர் கோயில் கொண்ட ஐயனாரே சரணடைந்தோம்

தளராத மனவுறுதி தந்தருளும் ஐயனே
தப்பில்லா நல்வழியை காட்டிடவே வேண்டுமைய்யா
தீமைகள் நெருங்காது தடுத்தருள வந்திடைய்யா
வாரிக்குட்டியூர் கோயில் கொண்ட ஐயனாரே சரணடைந்தோம்

தீயபகை கொடுமைகளைத் துடைத்தெறியும் ஐயனே
தொல்லையில்லா பெருவழியில் வழிநடத்த வேண்டுமைய்யா
துயரங்கள் தரும் வலியைத் துடைத்தெறிய வந்திடைய்யா
வாரிக்குட்டியூர் கோயில் கொண்ட ஐயனாரே சரணடைந்தோம்

மருத நிலச் சூழலிலே வந்தமர்ந்த ஐயனே
மாசில்லா மனங் கொண்டு வாழ வழி வேண்டுமைய்யா
தீயமனம் கொண்டோரின் உறவறுக்க வந்திடைய்யா
வாரிக்குட்டியூர் கோயில் கொண்ட ஐயனாரே சரணடைந்தோம்

உடனிருந்து எங்களைக் காத்தருளும் ஐயனே
உறவுகள் சிதையாது வாழ வழி வேண்டுமைய்யா
உள்ளத்தில் உறுதியையே உறுதி செய்ய வந்திடைய்யா
வாரிக்குட்டியூர் கோயில் கொண்ட ஐயனாரே சரணடைந்தோம்.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர் அகில இலங்கை இந்து மாமன்றம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here