HTML tutorial

 

ஹப்புத்தளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட காகொல்ல தோட்ட பகுதியில் தேயிலை செடிகளுக்குள் அமைந்துள்ள மின்கம்பத்தில் ஏறிய நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

குறித்த பகுதிக்குள் மாட்டுக்கு புல் அறுக்க சென்ற நபர் ஒருவரே குறித்த நபர் பலியாகி கிடப்பதை அவதினித்துள்ளார். இதன்போது கூக்குரலிட்டு அயலவர்களை வரவழைத்த பின்னர் ஹப்புத்தளை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

குறித்த சம்பவம் இன்று காலை 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதோடு உயிரிழந்த நபர் 68 வயதுடைய காகொல்லை பகுதியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தை ஆவார்.

மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

ராமு தனராஜா