மட்டக்களப்பு நாவலடி – அருள்மிகு கடல் நாச்சி அம்மன் திருக்கோயில்

0
53

கிழக்கு மாகாணம்- மட்டக்களப்பு மாவட்டம்- மட்டக்களப்பு, நாவலடி அருள்மிகு கடல் நாச்சி அம்மன் திருக்கோயில்

அற்புதங்கள் பல காட்டி அருள் பொழியும் தாயே
அன்பு கொண்டோர் மனங்களிலே குடியிருப்பாய் நீயே
அச்சம் போக்கியெம்மை ஆட்கொள்ள வருவாய்
நாவலடி கோயில் கொண்ட கடல் நாச்சி அம்மா

கிழக்கிலங்கை கடற்கரையில் காட்சி தரும் தாயே
நேர்மையுள்ளம் கொண்டோர் மனங்களிலே குடியிருப்பாய் நீயே
ஆறுதல் தந்தெம்மை ஆட்கொள்ள வருவாய்
நாவலடி கோயில் கொண்ட கடல் நாச்சி அம்மா

கடலலையின் சீற்றத்தைத் தடுத்தருளும் தாயே
கருணை கொண்டோர் மனங்களிலே குடியிருப்பாய் நீயே
கலக்கமின்றி வாழ்ந்திடவே எம்மை
ஆட்கொள்ள வருவாய்
நாவலடி கோயில் கொண்ட கடல் நாச்சி அம்மா

துன்பங்கள் அண்டாமல் காத்தருளும் தாயே
நம்பியுந்தன் அடி தொழுவோர் மனங்களிலே குடியிருப்பாய் நீயே
நிம்மதி தந்தெம்மை ஆட்கொள்ள வருவாய்
நாவலடி கோயில் கொண்ட கடல் நாச்சி அம்மா

காவல் தெய்வமாய் விளங்கி காத்தருளும் தாயே
கருத்துடனே செயற்படுவோர் மனங்களிலே குடியிருப்பாய் நீயே
கவலையில்லா மனந்தந்து எம்மை
ஆட்கொள்ள வருவாய்
நாவலடி கோயில் கொண்ட கடல் நாச்சி அம்மா

மட்டு மாநிலத்தினிலே வந்துறையும் தாயே
மாண்புடனே வாழ எண்ணும் மனங்களிலே குடியிருப்பாய் நீயே
மகிழ்ச்சி மனம் தந்தெம்மை
ஆட்கொள்ள வருவாய்
நாவலடி கோயில் கொண்ட கடல் நாச்சி அம்மா.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here