அகில இலங்கை பாடசாலை மட்ட கரப்பந்தாட்ட போட்டியில் தேசிய ரீதியில் தடம்பதித்த தலவாக்கலை தமிழ் வித்தியாலய மாணவர்கள்

0
56

அகில இலங்கை பாடசாலை மட்ட கரப்பந்தாட்ட போட்டி ரூவான்வெல ராஜசிங்க மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.

இப்போட்டியில் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய 18 வயதுக்கு கீழ்ப்பட்ட ஆண்கள் அணியினரரும், 16 வயதுக்கு கீழ்ப்பட்ட ஆண்கள் அணியினரும் கலந்துகொண்டனர். 18 வயதுக்கு கீழ்ப்பட்ட ஆண்கள் அணியினர் காலிறுதிச் சுற்று வரை சென்றனர்.அகில இலங்கை ரீதியாக முதல் எட்டு இடங்களுக்குள் தலவாக்கலை பாடசாலையும் அணி இடம்பெற்றிருந்தது சிறப்பம்சமாகும்.

45 பாடசாலைகள் பங்கேற்று மத்திய மாகாணத்தில் முதலாம் இடத்தை பெற்று,27 பாடசாலைகள் பங்கேற்ற தேசிய மட்ட போட்டியில் கலந்து இறுதி எட்டு அணிகளுக்குள் தலவாக்கலை பாடசாலையின் வீரர்கள் பெயரை பதித்துள்ளனர்.

அதேவேளை 16 வயதுக்கு கீழ்ப்பட்ட ஆண்கள் அணியினர் மத்திய மாகாணத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுதேசிய மட்டபோட்டியில் முதலாம் சுற்றில் வெற்றி பெற்று இரண்டாம் சுற்று வரை சென்றனர். தேசிய மட்ட போட்டிக்கு செல்வதற்கு உதவி புரிந்த கொட்டக்கலை பிரதேச சபை தலைவர் ,பெற்றோர்கள் பாடசாலை ஆசிரியர்கள் , இரண்டு நாள் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துத்தந்த ஸ்ரீ கலைவாணி தமிழ் மகா வித்யாலயா அதிபர், ரவிச்சந்திரன் ஆசிரியர் ஆகியோருக்கும் தலவாக்கலை பாடசாலை ஆசிரியர் டி சாந்தகுமார் வி .பிரதீபன் ஆகியோருக்கும் பாடசாலை விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியர் என் .நித்தியானந்த குமார் நன்றிகளை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here