HTML tutorial

வடமத்திய மாகாணம் – அனுராதபுர மாவட்டம் அனுராதபுரம் – நுவரக்குளம் அருள்மிகு பிள்ளையார் திருக்கோயில்

குளக்கரையில் கோயில் கொண்டு காவல் செய்யும் கணபதியே
குவலயத்தில் நல்லமைதி நிலவிடச் செய்வாய் அருள்மதியே
குற்றம் குறை பொறுத்தெம்மை காத்திடவே வரவேண்டும்
அனுராதபுரம் அமர்ந்தருளும் நுவரகுளத்துப் பிள்ளையாரே

அலை மோதும் குளக்கரையில் அமர்ந்தருளும் கணபதியே
அச்சமில்லா நிம்மதிக்கு வழிசெய்வாய் அருள்மதியே
அமைதியுடன் வாழ எம்மைக் காத்திடவே வரவேண்டும்
அனுராதபுரம் அமர்ந்தருளும் நுவரகுளத்துப் பிள்ளையாரே

நம்பித் தொழுவோர் நலன் காக்கும் கணபதியே
நம்பிக்கை கொண்ட மனம் உறுதி பெறச் செய்வாய் அருள்மதியே
நிம்மதியைத் தந்தெம்மைக் காத்திடவே வரவேண்டும்
அனுராதபுரம் அமர்ந்தருளும் நுவரகுளத்துப் பிள்ளையாரே

திடங்கொண்ட மனம் கொண்டு வாழவைக்கும் கணபதியே
துணிவுடனே வாழும் வழி செய்வாய் அருள்மதியே
தூயமனம் தந்தெம்மைக் காத்திடவே வரவேண்டும்
அனுராதபுரம் அமர்ந்தருளும் நுவரகுளத்துப் பிள்ளையாரே

எங்கும் எதிலும் உறைந்தருளும் கணபதியே
மனச்சாட்சி கொண்டவராய் வாழச் செய்வாய் அருள்மதியே
மாண்பு சிதையா மதிதந் தெம்மைக் காத்திடவே வரவேண்டும்
அனுராதபுரம் அமர்ந்தருளும் நுவரகுளத்துப் பிள்ளையாரே

வாழ நல்ல வழிகாட்டி வளமளிக்கும் கணபதியே
வளம் பெருக வாழச் செய்வாய் அருள்மதியே
வேதனைகள் நெருங்கா தெம்மைக் காத்திடவே வரவேண்டும்
அனுராதபுரம் அமர்ந்தருளும் நுவரகுளத்துப் பிள்ளையாரே.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.