ஒரு தொகை தேக்கு பலகைகளுடன் லொறி சாரதி கைது.

0
58

பொலிஸாரினால் இன்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில் பசறை மடூல்சீமை சந்தியில் அமைந்துள்ள சோதனை சாவடியில் படல்கும்பரை பகுதியில் இருந்து பதுளை நோக்கி வந்து கொண்டிருந்த லொறி ஒன்றை மறித்து சோதனைக்கு உட்படுத்திய போது குறித்த லொறியில் சட்டவிரோதமான முறையில் அனுமதி பத்திரமின்றி கொண்டு செல்லப்பட்ட சுமார் 15 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியான தேக்கு மரப் பலகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது லொறியின் சாரதியிடம் விசாரணைகளை மேற்கொண்ட போது பலகைகளை படல்கும்பரையிலிருந்து பதுளைக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார்.

இதன்போது 35 வயதுடைய குறித்த லொறியின் சாரதி கைது செய்யப்பட்டதுடன் தேக்கு பலகைகளும் பசறை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டன.

லொறியின் சாரதியை. இன்று நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ராமு தனராஜா

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here