பல லட்சம் ரூபாய் பெறுமதி வாய்ந்த தங்க ஆபரணங்களை தொலைத்தவருக்கே கையளித்த முச்சக்கரவண்டி சாரதி. – பதுளையில் நடந்த நெகிழ்ச்சிகர சம்பவம்!

0
99

#மனிருள்_மாணிக்கம்

இன்று நடைபெற்ற உள்ளம் நெகிழ்வடையும் ஒரு நிகழ்வு மடுல்சீமையில் நடந்தது

பல லட்சம் ரூபாய் பெறுமதி வாய்ந்த தங்க ஆபரணங்கள் தொலைந்து பின்னர் மீண்டும் கிடைத்தது.

மடூல்சீமை றோபேரி தோட்டத்தில் வசிக்கும் சசிகலா என்ற பெண்ணின் தாயார் சுகயீனமுற்ற நிலையில் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மரணமடைந்த தன் தாயார் அணிந்திருந்ததங்க ஆபரணங்களான
2 பவுன் மாலை ஒன்றும் மோதிரம் ஒன்றும், ஒரு பவுன் மதிக்கத்தக்க தோடுகள் ஒரு சோடியும் 2440 ரூபாய் பணம் என்பவற்றை தனது கைப்பையில் எடுத்துக் கொண்டு பதுளையில் இருந்து பசறை வழியாக பிட்டமாறுவை பகுதிக்கு முச்சக்கர வண்டியில் செல்லும் போது பியாஜியோ ரக முச்சக்கர வண்டியின் பின்பகுதியில் வைக்கப்பட்டிருந்த கைப்பை தவறி வீதியில் விழுந்துள்ளது.

இதனை அவதானிக்காத பெண்ணும் தாய் இறந்த சோகத்தில் தனது பயணத்தை தொடர்ந்துள்ளார்.

இதன்போது மாளிகாத்த்ன்னை பகுதியில் இருந்து யூரி பௌத்த விகாரைக்கு செல்வதற்காக விகாரையில் தேரரையும் ஏற்றிக் கொண்டு சென்ற N. தியாகராஜா என்ற யூரி பகுதியைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதி மடூல்சீமை செல்லும் எவீதியில் 6 ம் கட்டைப் பகுதியில் குறித்த கைப்பையை வீதியில் இருந்து கண்டெடுத்துள்ளார்.

குறித்த கைப்பையை பசறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததோடு பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறித்த கைப்பையிலிருந்த தேசிய அடையாள அட்டையின் விலாசத்தை அவதானித்து உடன் மடூல்சீமை பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்ததன் பின்னர் குறித்த பெண்ணை பசறை பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து குறித்த பெண்ணிடம் மேற்குறிப்பிட்ட பொருட்களடங்கிய கைப்பை ஒப்படைக்கப்பட்டது.

முச்சக்கர வண்டி ஓட்டுநர் தியாகராஜாவின் செயல்பாடு அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதே வேளை தியாகராஜா போன்ற தெய்வ உள்ளங்கள் மலையகத்தில் வசிப்பதால் நமது மலையகம் பெருமை கொள்கிறது

தியாகராஜா அவர்களுக்கு எமது
வாழ்த்துகளையும்
பாராட்டுக்களையும்
நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ராமு தனராஜா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here