புல் வெட்ட சென்ற நபர் சடலமாக மீட்பு. 

0
90

லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹொப்டன் அம்பலாங்கொடை பகுதியில் வசித்து வந்த வேலுகுமார் சுந்தரம் என்ற 65 வயதுடைய நபர் ஒருவர் கடந்த 19 ம் திகதி மதியம் 2.30 மணியளவில் வளர்ப்பு பிராணிகளுக்கு புல் வெட்டுவதற்காக வீட்டில் இருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை என லுணுகலை பொலிஸ் நிலையத்தில் கடந்த 19 ம் திகதி வேலுகுமார் சுந்தரத்தின் சகோதரரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

முறைப்பாட்டை தொடர்ந்து தேடுதலை மேற்கொண்ட லுணுகலை பொலிஸாரும் மற்றும் காணாமல் போன நபரின் உறவினர்களும் ஹொப்டன் அம்பலாங்கொடை தோட்ட பொதுமக்களும் இணைந்து காட்டுப் பகுதிகள் எங்கும் தேடுதலை மேற்கொண்டனர். இதன்போது ஹொப்டன் அம்பலாங்கொடை பகுதியில் அமைந்துள்ள ஐம்பது ஏக்கர் தனியார் காணியில் தேயிலை செடிகளுக்கு மத்தியில் இன்று 21.11.2022 சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் ஒரு பிள்ளையின் தந்தை என்பதோடு மரணித்தமைக்கான காரணத்தை கண்டறியும் முகமாக‌ விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ராமு தனராஜா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here