லிந்துலை நு/தங்கக்கலை இல.03 தமிழ் வித்தியாலய மாணவி வாக்கியம் எழுதுதல் போட்டியில் மாகாண மட்டத்தில் முதலாம் இடம்

0
259

நுவரெலியா கல்வி வலயம் கோட்டம் iii நு/தங்கக்கலை இல.03 தமிழ் வித்தியாலயதத்தை சேர்ந்த மாணவி விஜயராம் கீர்த்தனா மத்திய மாகாண கல்வி திணைக்களத்தால் நடத்தப்பட்ட நவராத்திரி போட்டி 2022 பிரிவு ஒன்றில் வாக்கியம் எழுதுதல் போட்டியில் கோட்ட மட்டத்திலும், வலய மட்டத்திலும் முதலாம் இடத்தை பெற்று மாகாண மட்டத்திலும் முதலாம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இப்பாடசாலையை சேர்ந்த அண்ணாத்துரை பவின்ஷா பிரிவு ஒன்று பேச்சு போட்டியில் கோட்ட மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று வலய மட்டத்தில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளார். இப் போட்டிகளுக்கு மாணவர்களை பயிற்றுவித்த ஆசிரியர் பன்னீர்செல்வம் உட்பட ஏனைய ஆசிரியர்களையும் ஆலோசனைகளை வழங்கிய அதிபருக்கும் எமது  வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here