கதிர்காமம் – அருள்மிகு சிவன் திருக்கோயில்

0
62

ஊவா மாகாணம்- மொனராகலை மாவட்டம் கதிர்காமம்- அருள்மிகு சிவன் திருக்கோயில்

கதிர்காமத் திருத்தலத்தில் கோயில் கொண்ட சிவனே

கருணை ஒளிபரப்பி எங்கும் காத்திடுவாய் ஐயா

பெருமனது கொண்டெமது துயர் போக்க வேண்டும்

ஆதியுமந்தமும் அறியவொண்ணா எங்கள் சிவனே

தமிழ் மொழியை உலகிற்கு உவந்தளித்த சிவனே

தடம்புறழா மனவுறுதிதந்து எமைக் காத்திடுவாய் ஐயா

உரிமைகளை உறுதி செய்து துயர் போக்க வேண்டும்

ஆதியுமந்தமும் அறியவொண்ணா எங்கள் சிவனே

மாணிக்க கங்கை கரையில் இருந்தருளும் சிவனே

மானமுடன் வாழும்வழி தந்து எமைக் காத்திடுவாய் ஐயா

உள்ளத்தில் மகிழ்ச்சி தந்து துயர் போக்க வேண்டும்

ஆதியுமந்தமும் அறியவொண்ணா எங்கள் சிவனே

 

வேல் கொண்ட வேலவனைத் தந்திட்ட சிவனே

வேறுபட்டு சிதையும் நிலை போக்கி எமைக் காத்திடுவாய் ஐயா

நெஞ்சமதில் நிம்மதியைத் தந்து துயர் போக்க வேண்டும்

ஆதியுமந்தமும் அறியவொண்ணா எங்கள் சிவனே

 

அகிலத்தின் மூலமுமாய் இருக்கும் எங்கள் சிவனே

ஆதரித்து, அரவணைத்து எமைக் காத்திடுவாய் ஐயா

வாழும்வழி சிறப்பாக்கி துயர் போக்க வேண்டும்

ஆதியுமந்தமும் அறியவொண்ணா எங்கள் சிவனே

 

உமையவளை உடன் கொண்டு உறைகின்ற சிவனே

உத்தமராய் வாழும் வழிகாட்டி எமைக் காத்திடுவாய் ஐயா

நல்லவர்கள் உறவு தந்து துயர் போக்க வேண்டும்

ஆதியுமந்தமும் அறியவொண்ணா எங்கள் சிவனே.

 

ஆக்கம்- த.மனோகரன்.

துணைத் தலை வர்,

அகில இலங்கை இந்து மாமன்றம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here