யாழ். வேலணை – அருள்மிகு உச்சிப் பிள்ளையார் திருக்கோயில்

0
31

வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்டம் – வேலணை – அருள்மிகு உச்சிப் பிள்ளையார் திருக்கோயில்

காவலூரில் வந்துறையும் கணபதியே சரணமப்பா
கவலை களைந் தெம்மை வாழ வைக்க வருவாயப்பா
காலமெல்லாம் உடனிருந்து காத்திட வேண்டுமப்பா
வேலணையில் கோயில் கொண்ட எங்கள் உச்சிப் பிள்ளையாரே

அறம் காக்க வந்துறையும் கணபதியே சரணமப்பா
அச்சம் களைந் தெம்மை வாழ வைக்க வேண்டுமப்பா
என்றும் உடனிருந்து உயர்வு தர வேண்டுமப்பா
வேலணையில் கோயில் கொண்ட எங்கள் உச்சிப் பிள்ளையாரே

உமையவளின் திருமகனாய் வந்துதித்த கணபதியே சரணமப்பா
உள்ளத்தில் அமைதி தந்து வாழ வைக்க வேண்டுமப்பா
உறவுகள் வளம் பெறவே காத்திட வேண்டுமப்பா
வேலணையில் கோயில் கொண்ட எங்கள் உச்சிப் பிள்ளையாரே

வேண்டும் வரம் தந்து அருளுகின்ற கணபதியே சரணமப்பா
வெற்றி முகம் தந்து வாழவைக்க வேண்டுமப்பா
வற்றாத பெருங் கருணை தந்திட வேண்டுமப்பா
வேலணையில் கோயில் கொண்ட எங்கள் உச்சிப் பிள்ளையாரே

வேழமுகம் கொண்டமர்ந்து நன்மை தரும் கணபதியே சரணமப்பா
வேத நெறி நின்றெம்மை வாழவைக்க வேண்டுமப்பா
துணையிருந்தெம்மை என்றும் காத்திட வேண்டுமப்பா
வேலணையில் கோயில் கொண்ட எங்கள் உச்சிப் பிள்ளையாரே

நம்பியடி பணிவோர் நலன் காக்கும் கணபதியே சரணமப்பா
நிம்மதியைத் தந்தெம்மை நிலைப்படுத்த வேண்டுமப்பா
நேர்மை வழி வாழ எம்மை நெறிப்படுத்த வேண்டுமப்பா
வேலணையில் கோயில் கொண்ட எங்கள் உச்சிப் பிள்ளையாரே.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here