ஊட்டச்சத்துள்ள உணவுகள் கிடைக்கும், கிடைக்காத வீடுகளைக் கண்டறிய புதிய செயலி

0
36

அடுத்த மாதம் முதல் ஒவ்வொரு வீட்டையும் இலக்காகக் கொண்டு,அவர்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்கின்றதா என்பது குறித்த தரவுகளை சேகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி அலுவலகமும் சுகாதார அமைச்சும் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் போஷாக்கு பிரிவின் தலைவர் வைத்தியர் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

உணவுப் பற்றாக்குறை மற்றும் உணவை எவ்வாறு பெற்றுக்கொள்வது குறித்த தகவல்களை வீடுகளில் இருந்து சேகரிப்பதற்காக, ஜனாதிபதி அலுவலகத்தால் ஒரு செயலி  உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், போஷாக்கு குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் குறித்தும் அதிக கவனம் செலுத்தப்பட உள்ளன.

இதன்மூலம், உணவுப் பற்றாக்குறை உள்ள வீடுககள் தொடர்பாக சேகரிக்கப்பட்ட தரவுகளை பகுப்பாய்வு செய்து, எதிர்காலத்தில் அந்த வீடுகளுக்குத் தேவையான உணவு வகைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்;.

இந்த தரவுகள் பிரதேச செயலக அலுவலகங்கள் ஊடாக சேகரிக்கப்பட்டு ஜனாதிபதி செயலக அதிகாரிகளால் கண்காணிக்கப்படும்.

அவர்களின் கண்காணிப்பின்படி பிரதேச செயலகங்கள் ஊடாக அந்தந்த வீடுகளுக்கு உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்படும். உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதிப்படுத்தும் நோக்கில் சுகாதார அமைச்சு இந்த தீர்மானத்தை எடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வைத்தியர் ரேணுகா ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here