நுவரெலியாவில் மாணவர்களுக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்கப்பட்டது

0
65

டி.சந்ரு செ.திவாகரன்

நுவரெலியாவில் மாணவர்களுக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்கப்பட்டது.

“எமது பிள்ளைகள் பொருமதியானவர்கள் ” என்ற தொனிப்பொருளின் கீழ் நுவரெலியா பிரதேசத்தின் தமிழ் ,சிங்கள பாடசாலைகளுக்கு தலைக்கவசம் இன்றி செல்லும் மாணவர்களின் பெயர் விபரங்களை திரட்டி மாணவர்களின் நலன் கருதியும் , வீதி விபத்தில் பாடசாலை மாணவர்களின் உயிர்காக்கும் நோக்குடன் அலியான்ஸ் காப்புறுதி நிறுவனம் மற்றும் பொலிஸாரின் ஆதரவுடன் தலைக்கவசத்தின் பயன்பாடு மற்றும் தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வுகளையும் மாணவர்களுக்கு வழங்கி இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை 25) நுவரெலியா பொலிஸ் நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நுவரெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி இணைந்து மாணவர்களுக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்கினர்.

 

அலியான்ஸ் காப்புறுதி நிறுவனத்தின் நாடலாவிய ரீதியில் சமூக வேலைத்திட்டமாக தலைக்கவசம் விநியோகம் செய்துவருக்கிறமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here