கொட்டகலை தமிழ் மகாவித்தியாலயத்தில் இம்முறை பத்து மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் மிகச் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர். மேலும் பல சிறந்த பெறுபேறுகளை பெறுவதற்காக வழிகாட்டிய நுவரெலியா வலயக் கல்வி பணிமணையின் கல்வி பணிப்பாளர், மேலதிக வலயக் கல்வி பணிப்பாளர், கோட்டக்கல்வி பணிப்பாளர்கள், உதவி கல்வி பணிப்பாளர்கள், ஆசிரியர் ஆலோசகர்கள் மற்றும் பல்வேறு வழிகளில் உதவிய பழைய மாணவர்கள் நலன் விரும்பிகள் அனைவருக்கும் பாடசாலை நிர்வாகம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது. மேலும் மாணவர்களின் கற்றலுக்கு தேவையான உதவிகளை வழங்கிய பெற்றோர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவிப்பதாகவும் பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.