HTML tutorial

அட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியில் 19 மாணவர்கள்
ஒன்பது பாடங்களிலும் ‘ஏ’ தர சித்திகள்.

வெளியாகியுள்ள க.பொ. த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் படி, நுவரெலியா மாவட்டத்தின் அட்டன் கல்வி வலய பாடசாலையான அட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியில் 19 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் ஏ தர சித்திகளைப் பெற்றுள்ளனர். மேலும் 22 மாணவர்கள் எட்டு பாடங்களிலும் 16 பேர் ஏழு பாடங்களிலும் 18 பேர் ஆறு பாடங்களிலும் ஏ தர சித்திகளைப் பெற்றுள்ளனர். அனைத்துப் பாடங்களிலும் ஏ தர சித்திகளைப் பெற்ற மாணவர்களில் நான்கு பேர் ஆங்கில மொழி பிரிவை சேர்ந்தர்வகளாவர்.

 

மேலும் உயர்தரம் செய்வதற்கு தகுதி பெற்ற மாணவர்களின் சதவீதம் 98 ஆகும். இம்முறை பரீட்சைக்கு தோற்றியவர்களின் எண்ணிக்கை 192 ஆகும். இதில் ஆறு பாடங்களுக்கு மேல் சித்தியடைந்த மாணவர்களின் எண்ணிக்கை 191 ஆகும். கணிதம் மற்றும் தமிழ் மொழிகளுடன் ஆறு பாடங்களில் சித்தியடைந்த மாணவர்களின் எண்ணிக்கை 188 ஆகும். இதன் படி உயர்தரம் கற்பதற்கான தகுதியுடன் சித்தியடைந்த மாணவர்களின் எண்ணிக்கை 188 ஆகும். அதே வேளை ஆங்கிலப்பிரிவில் தோற்றிய 39 மாணவர்களின் அனைத்து மாணவர்களும் உயர்தரம் செய்யக்கூடிய பெறுபேறுகளைப் பெற்று 100% சித்தியைப்பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். சிறந்த சித்திகளைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்த மாணவர்கள் மற்றும் அவர்களை வழிநடத்திய ஆசிரியர்கள், பெற்றோர்கள் , பழைய மாணவர் சங்கத்தினர், பாடசாலை அபிவிருத்தி சங்கம் ஆகியோருக்கு கல்லூரி அதிபர் ஆர்.ஸ்ரீதர் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.