பதுளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வெவெஸ்த்தை தோட்டம் வெவெஸ்த்தை பெருந்தோட்ட பகுதியில் 29 வயதுடைய வாய்பேசமுடியாத மகன் தனது 60 வயதுடைய தகப்பனை மரக்கட்டையால் தலையில் தாக்கியுள்ளார்.

தகப்பன் சம்பவ இடத்திலேயே பலியானதோடு இச்சம்பவம் நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதோடு சம்பவம் தொடர்பில் 29 வயதுடைய வாய்பேசமுடியாத மகனை நேற்று இரவு பதுளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தாக்கிய இளைஞரின் தாயார் இரண்டு திருமணங்கள் முடித்தவர் என்பதுடன் முதல் கணவர் அவரை விட்டு சென்றுள்ளதாகவும் தாயாரின் இரண்டாவது கணவரையே மகன் தாக்கி கொலை செய்துள்ளதாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றர் .

பிரேதம் நீதிவான் பார்வையிடுவதற்காக சம்பவ இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளது.

ராமு தனராஜா