வடமாகாணம் – மன்னார் மாவட்டம் – மன்னார் அருள்மிகு இராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோயில்

கலைகளுக்கு அரசியாய் வீற்றிருக்கும் தாயே
அறிவுக் கண் திறக்க பார்த்து நீ அருளிடம்மா
பல்கலை அறிவு பெற்றுயர என்றும்
அருகிருந்து அருளிடம்மா இராஜேஸ்வரித் தாயே

மன்னார் திருமண்ணில் மாண்புடனிருந் தருளும் தாயே
மனக்கவலை அண்டாமல் பார்த்து நீ அருளிடம்மா
மனமகிழ்வு பெற்று நாம் வாழ என்றும்
அருகிருந்து அருளிடம்மா இராஜேஸ்வரித் தாயே

தூயவள வாழ்வளிக்கும் திருமகளே தாயே
துயர் அண்டா நிலை தந்து பார்த்து நீ அருளிடம்மா
துணிவுடனே நாம் வாழ என்றும்
அருகிருந்து அருளிடம்மா இராஜேஸ்வரித் தாயே

அன்பு கொண்டு ஆதரித்து அரவணைக்கும் தாயே
அச்சமின்றி நிம்மதியை தந்து பார்த்து நீ அருளிடம்மா
அல்லல் நெருங்கா நிலையில் நாம் வாழ என்றும்
அருகிருந்து அருளிடம்மா இராஜேஸ்வரித் தாயே

கௌரியம்மை இருந்தருளும் இடம் அமர்ந்த தாயே
கௌரவமாய் வாழும்நிலை தந்து பார்த்து அருளிடம்மா
கொடுமைகள் விலக்கி நாம் வாழ என்றும்
அருகிருந்து அருளிடம்மா இராஜேஸ்வரித் தாயே

மனமகிழ்வு தந்து எம்மை வாழவைக்கும் தாயே
மனமகிழ்ச்சி தந்து எம்மைப் பார்த்து அருளிடம்மா
மானமுடன், பெருமையுடன் நாம் வாழ என்றும்
அருகிருந்து அருளிடம்மா இராஜேஸ்வரித் தாயே.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.