நு/கிளாஸ்கோ தழிழ் வித்தியாலயம் அக்கரப்பத்தனை பாடசாலையில் வரலாற்றில் முதல் தடவையாக அதிகப்படியான மாணவர்கள் சாதாரண தரப்பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரம் தோற்றுவதற்கு தேர்ச்சி யடைந்துள்ளார்கள்.

அத்தோடு க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றிய 19 மாணவர்களில் 17 மாணவர்கள் உயர்தரத்திற்கு செல்ல தகுதியுடையவர்களாகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் பாட அடிப்படையில் பாடசாலையின் பெறுபேற்று சதவீதம்
பின்வருமாறு.

01.சமயம் 94%
02.தமிழ் 100%
03.கணிதம் 89%
04.வரலாறு 100%
05.விஞ்ஞானம் 84%
06.ஆங்கிலம் 84%
07.சித்திரம் 100%
08.விவசாயம் 77%
09.சுகாதாரமும் உடற்கல்வியும் 100%
10.RC 100%
11.இலக்கிய நயம் 58%
12.குடியியல் 95%

மேலும் சித்தியடைந்த மாணவர்களின் பெறுபேறுகளின் அடிப்படையில் 89.4% பாடசாலை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.