வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்டம் கல்வியங்காடு – அருள்மிகு சந்திரசேகரப் பிள்ளையார் திருக்கோயில்

அங்காடி அருகு கொண்டு வீற்றிருக்கும் பிள்ளையார்
அச்சம் தவிர்த் தெமக்கு ஆறுதலைத் தந்தருள்வார்
நம்பியவர் அடியை நாமும் தொழுதுவிட்டால்
திண்ணமாய் அருளிடுவார் கல்வியங்காட்டிலுறை சந்திரசேகரப் பிள்ளையார்

துணிவைத் தந்தெமக்கு ஆற்றல் தரும் பிள்ளையார்
தூய மனத்தினைராய் வாழவழி தந்தருள்வார்
நம்பியவர் அடியை நாமும் தொழுது விட்டால்
திண்ணமாய் அருளிடுவார் கல்வியங்காட்டிலுறை சந்திரசேகரப் பிள்ளையார்

வளங் கொழிக்கும் தமிழர் மண்ணில் வந்தமர்ந்த பிள்ளையார்
வருந் துன்பம் தடுத்தெமக்கு நிம்மதியைத் தந்திடுவார்
நம்பியவர் அடியை நாமும் தொழுது விட்டால்
திண்ணமாய் அருளிடுவார் கல்வியங்காட்டிலுறை சந்திரசேகரப் பிள்ளையார்

எங்கும் எதிலும் எழுந்தருளும் பிள்ளையார்
ஏக்கம் தடுத்தெமக்கு நம்பிக்கையைத் தந்தருள்வார்
நம்பியவர் அடியை நாமும் தொழுது விட்டால்
திண்ணமாய் அருளிடுவார் கல்வியங்காட்டிலுறை சந்திரசேகரப் பிள்ளையார்

நம்பிக்கை தந்தெம்மை வாழ வைக்கும் பிள்ளையார்
நிரந்தரமாய் நன்மைகளை நமக்கென்றும் தந்தருள்வார்
நம்பியவர் அடியை நாமும் தொழுது விட்டால்
திண்ணமாய் அருளிடுவார் கல்வியங்காட்டிலுறை சந்திரசேகரப் பிள்ளையார்

ஆற்றல் தந்து வழிகாட்டி அருளளிக்கும் பிள்ளையார்
அமைதி மனம் கொண்டு வாழும் மனநிலையைத் தந்தருள்வார்
நம்பியவர் அடியை நாமும் தொழுது விட்டால்
திண்ணமாய் அருளிடுவார் கல்வியங்காட்டிலுறை சந்திரசேகரப் பிள்ளையார்.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.