நானுஓயா -டெஸ்போட் தமிழ் வித்தியாலயத்தில் 77 வீதமான மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப்பெற்று உயர்தரத்துக்கு தெரிவாகியுள்ளனர்.

இந்த பெறுபேறு 27 வருட பாடசாலை கால வரலாற்றில் முதன்முறையாக இவ்வாறு மாணவர்கள் 77 % சித்தியெய்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். கடந்த வருடம் 66% மாணவர்கள் உயர்தரத்துக்கு தேர்வாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.பாடசாலை அதிபர்
எஸ் .சிவபாலசுந்தரம் மாணவர்களையும் ,கற்பித்த ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.