இங்கிரிய, றைகம், கீழ் பிரிவு விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலயத்தின் கௌரி லலிதா ரூபினி என்ற மாணவி 2022 சாதாரணதர பரீட்சைகளின் பெறுபேறுகளில் 9A
பெற்று களுத்துறை மாவட்ட பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு மத்தியில் வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார்.
இவர், இங்கிரிய தோட்டத்தில் வசிக்கும் ரஞ்சித்குமார், அழகம்மா தம்பதிகளின் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்விப் பயிலும் மற்றொரு மாணவியான. பிரகாஷினி 8A ,B 1B
பெறுபேறுகளைப் பெற்றுள்ளார். இந்த மாணவி இங்கிரிய, சாந்த பீட்டர்ஸ் பகுதியில் வசிக்கும் பாலசுப்ரமணியம், தம்பதிகளின் மகளாவார்.

இந்த இரண்டு மாணவிகளின் பெறுபேறுகளால் விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலயம் பெருமையடையும் இதேவேளை, இந்த மாணவிகள் இருவரும் பிரத்தியேக தனியார் வகுப்புகளுக்குச் செல்லாமல் பாடசாலை கல்வியை மட்டுமே சிறப்பாக கற்று இந்த மகத்தான வெற்றியை சாத்தியமாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

றைகம், கீழ் பிரிவு விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலய வரலாற்றில் முதல் முறையாக இந்த வரலாற்றுச் சாதனை பதிவு செய்யப்பட்டிருப்பதோடு, களுத்துறை மாவட்ட பெருந்தோட்டப் பாடசாலைகளின் வரலாற்றில் முதல் முறையாக 9யு பெறுபேறுகளைப் இந்த பாடசாலை பெற்றிருப்பது களுத்துறை தமிழர்களுக்கு பெருமை சேர்ப்பதாக விபுலானந்தா பாடசாலையின் அதிபர் திரு. ஆனந்தகுமார் தெரிவிக்கின்றார்.