இன்று காலை பதுளை ஸ்பிரிங்வெளியில் இருந்து பதுளை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று பதுளை இருந்து ஸ்பிரீங்வெளி செல்லும் வீதியில் தும்பிலியாவ பகுதியில் வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளாக இருந்த நிலையில் சாரதியின் சாதூர்யமான முயற்சியினால்  பாரிய விபத்து ஒன்று தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.


குறித்த பேருந்தில் கிட்டத் தட்ட 50பேர் வரை பயணித்ததாகவும் இதில் அதிகளவானோர் பாடசாலை மாணவர்கள் எனவும் இவர்கள் அனைவரும் கருத்தரங்கு ஒன்றுக்கு குறித்த பேருந்தில் வருகைத்தந்ததாகவும் தெரிவிக்கப் படுகின்றது.


பேருந்தில் பயணித்த எவருக்கும் எதுவித சேதங்களும் ஏற்படவில்லை.


மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ராமு தனராஜா