வெளிவந்துள்ள 2021 (2022) க.பொ.தசாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய மிகச்சிறந்த பெறுபேறுகளை பலாங்கொடை சீ.சீ.தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் பெற்று கொடுத்துள்ளனர். விசேடமாக தமிழ்மொழி, கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் உட்பட பல பாடங்களில் எதிர்பார்த்த பெறுபேறுகளை விடஅதிசிறந்த பெறுபேறுகளைபெற்றுக்கொடுத்து பலாங்கொடை கல்விவலயத்தில் சிறந்ததொருபாடசாலையாக இப்பாடசாலையைஅடையாளப்படுத்தியுள்ளனர்.இப்பெறுபேறுகளுக்கு அமையபின்வரும் இரு மாணவர்கள் 9A சித்திகளைப் பெற்று பாடசாலைக்குப்பெருமை சேர்த்துள்ளனர்.
1. T. விதுர்ஷன்
2. K. கிறிஷ்டீனா

அத்தோடு 7A, 6A, 5A, 4A, 3A, 2A, 1A போன்ற
பெறுபேறுகளைப் பெற்று 9 பாடங்களிலும் சித்தி அடைந்துள்ளனர்.மேலும் பரீட்சைக்குத் தோற்றிய 103
மாணவர்களில் 77 மாணவர்கள்உயர்தரம் கற்பதற்கு சித்திப்பெற்றுள்ளனர். இத்தகைய சிறந்த பெறுபேறுகளைபெற்றுக் கொடுப்பதற்காக கடுமையாக உழைத்த ஆசிரியர்களுக்கும் பிள்ளைகளின் பெற்றோர்களுக்கும் பல வழிகளில் உதவி புரிந்த பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவருக்கும் எமது வாழ்த்துக்களையும் நன்றிகளையும்தெரிவித்து மகிழ்கின்றோம் என்று பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளதோடு , இச்சாதனைகளை நிகழ்த்திய மாணவர்களை கொண்டு உயர்தரத்திலும் கலை மற்றும் வர்த்தக பிரிவுகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு எமது ஆசிரியர்கள் பல செயற்றிட்டங்களோடு ஆயத்தமாக உள்ளனர்.

எனவே உயர்தரத்திலும் சிறந்த பெறுபேறுகளை பெற்று சாதனைகளை படைத்து பல்கலைக்கழகம் சென்று தங்களது வாழ்க்கையை செழிப்புற மாற்றிக் கொள்வதற்கு பலாங்கொடை சீ.சீ. தமிழ் மகா வித்தியாலயம் எப்போதும் களம் அமைத்துக் கொடுப்பதற்கு காத்துக் கொண்டிருக்கிறது எனவும் அதிபர் தெரிவித்தார்.