மேல் மாகாணம் – கம்பஹா மாவட்டம், பேலியகொடை, அருள்மிகு ஸ்ரீ பூபால விநாயகர் திருக்கோயில்

வாழ்விற்கு ஒளியூட்டி வளமளிக்கும் விநாயகரே
வற்றாத பெருங்கருணை எமக்களிக்க எழுந்திரைய்யா
வாக்கு தவறாமல் நாமென்றும் வாழ்வதற்கு
ஏற்றவழி செய்திடைய்யா பேலியகொடை கோயில் கொண்ட பூபால விநாயகரே

மருள்போக்கி அருளளித்து வளம் அளிக்கும் விநாயகரே
தழும்பலில்லா நல்வாழ்வை எமக்களிக்க எழுந்திரைய்யா
நிதானம் தவறாமல் நாமென்றும் வாழ்வதற்கு
ஏற்றவழி செய்திடைய்யா பேலியகொடை கோயில் கொண்ட பூபால விநாயகரே

வழித்துணையா யிருந்தெம்மைக் காத்தருளும் விநாயகரே
வெற்றியுடன் நாம்வாழ எமக்கருள எழுந்திரைய்யா
வழிதவறிச் செல்லாமல் நாமென்றும் வாழ்வதற்கு
ஏற்றவழி செய்திடைய்யா பேலியகொடை கோயில் கொண்ட பூபால விநாயகரே

நல்லறிவு தந்தெம்மை வாழவைக்கும் விநாயகரே
நல்ல நினைவுகளை எமக்கருள எழுந்திரைய்யா
நிம்மதி இழக்காமல் நாமென்றும் வாழ்வதற்கு
ஏற்றவழி செய்திடைய்யா பேலியகொடை கோயில் கொண்ட பூபால விநாயகரே

நிம்மதி என்றும் தந்து நிலைப்படுத்தும் விநாயகரே
நேர்மையாய் நாம் வாழ எமக்கருள எழுந்திரைய்யா
நொந்து மனம் வாடாமல் நாமென்றும் வாழ்வதற்கு
ஏற்றவழி செய்திடைய்யா பேலியகொடை கோயில் கொண்ட பூபால விநாயகரே

காலமெல்லாம் உடனிருந்து காத்தருளும் விநாயகரே
குவலயத்தில் உரிமையுடன் நாம் வாழ எமக்கருள எழுந்திரைய்யா
குறையின்றி நிறைவாக நாமென்றும் வாழ்வதற்கு
ஏற்றவழி செய்திடைய்யா பேலியகொடை கோயில் கொண்ட பூபால விநாயகரே.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.