மலையக கலாசார ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அமரர் தர்ஷன் தர்மராஜ் அவர்களின் ஞாபகார்த்த இலவச ஊடக செயலமர்வு கொழும்பு இராமகிருஷ்ணா தமிழ் வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது.

குறித்த கருத்தரங்கில் சிரேஷ்ட ஊடகவியலாளர் நிர்ஷன் ராமானுஜம், ஊடகவியலாளர் ரஞ்சன் அருண் பிரசாத் ஊடகவியலாளர் சு.அஜித் குமார் மற்றும் ஊடகவியலாளர் தனா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் குறித்த நிகழ்வுக்கு ட்ரூசிலோன், தமிழன் பத்திரிக்கை,மலையகம்.lk மற்றும் தமிழ் FM ஆகியவை ஊடக அனுசரனையை வழங்குகின்றன.