இன்று அதிகாலை 3.30 மணியளவில்
ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் குடாஒயா பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று பிரதான பாதையில் இருந்து சுமார் 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளகியுள்ளது.

கொழும்பில் இருந்து வெலிமடை சென்ற முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளகியுள்ளது

.விபத்தின் போது இருவர் முச்சக்கர வண்டியில் இருந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.சிறுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்

தற்போது சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தருவதால் வாகனங்களை அதிகமாக ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் பரிசோதனை,கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றதை காணக்கூடியதாகவுள்ளது

விபத்துக்கான காரணத்தை ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்