டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்குவற்கு கல்வி சீர்திருத்தங்கள் அவசியமாகும் என இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக உயர் பிரிவில் கற்கும் மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் புதிய பாடத்திட்டத்தின் கீழ் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஒரு இலட்சம் அரச அதிகாரிகளுக்கு டிஜிட்டல் தகவல் தொழில்நுட்ப அறிவை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம்  (02) ஆரம்பித்துள்ளது. இதன் கீழ் கேகாலை மாவட்ட செயலகத்தில் . அரச அதிகாரிகளுக்கு டிஜிட்டல் தகவல் தொழில்நுட்ப அறிவை வழங்கும் ஆரம்ப நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் அரசாங்க அதிகாரிகள் பலர் கலந்துகொண்ட இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், தகவல் தொழில்நுட்பத் துறையின் மூலம் அந்நியச் செலாவணியை ஈட்ட வாய்ப்புள்ளது.

இந்தத் துறையின் மூலம் கடந்த ஆண்டில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய செலாவணியை இலங்கைக்கு ஈட்ட முடிந்தது. 2024ஆம் ஆண்டுக்குள் அதனை மூன்று பில்லியன் டொலர்களாக அதிகரிப்பதே தொழில்நுட்ப அமைச்சின் இலக்காகும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

அனைத்து அரச சேவைகளையும் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் வலுவான சிறந்த அரச சேவைகளாக மாற்றி அமைப்பதே ஜனாதிபதியின் நோக்கமாகும். பொருளாதார அபிவிருத்தியை அடைந்து கொள்வதே வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும் என்றும் இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் மேலும் தெரிவித்தார்.