இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கு புதிய தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்த செயலியின் ஊடாக சுற்றுலாப் பயணிகள் தங்கள் இருப்பிடத்தை அறிந்துகொள்வதற்கு அவர்கள் விரும்பினால் அனுமதிக்கலாம்.கடற்கரை பகுதிகளில் சுற்றுலா பயணிகளை கவரும் இடங்களில் ,இவர்களின் பாதுகாப்புக்காக சுற்றுலா பயணி பொலிஸ் குழு கடமையில் ஈடுபடுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

சுற்றுலா தொழில்துறையினை அபிவிருத்தி செய்வது இதன் நோக்கமாகும். 15 இலட்சம் சுற்றுலா பயணிகளை அடுத்த வருடம் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் அமைச்சர் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கூறினார்.