டீசலின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை ,சமையல் எரிவாயுவின் விலை மறுசீரமைக்கப்பட்டுள்ளதாக லிற்றோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேற்று நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில் டீசலின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதன்படி, டீசலின் புதிய விலை 420 ரூபாவாகும். ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

இதேவேளை, லிற்றோ கேஸின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கேஸின் விலை அதிகரித்துள்ளதை கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக லிற்றோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

12.5 கிலோகிராம் எடை கொண்ட கேஸ் சிலிண்டரின் விலை 250 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அதன் புதிய விலை நான்காயிரத்து 610 ரூபாவாகும். ஐந்து கிலோகிராம் எடை கொண்ட கேஸ் சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதோடு, அது ஆயிரத்து 850 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது. 2.3 கிலோகிராம் எடை கொண்ட கேஸ் சிலிண்டரின் புதிய விலை 860 ரூபாவாகும் என்று லிற்றோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.