இலங்கை வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை முன்னிட்டு புதிய பொலிஸ் நடமாடும் சேவைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அடுத்த வருடத்தில் 15 இலட்சம் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு வரவழைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை நவம்பர் மாதத்தில் சுற்றுலாத்துறை அபிவிருத்தியின் மூலம் 107 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளன.

இதற்கமைவாக, கடந்த 11 மாத காலங்களில் சுற்றுலாத் துறையின் மூலம் 1,100 மில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட தொகை கிடைத்துள்ளது. ஒக்டோபர் மாதத்தில் பெறப்பட்ட வருமானம் 75 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் மேலதிகமாகும். தற்போது தொழில் துறை வழமைக்குத் திரும்பியிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.