சபரகமுவ மாகாணத்தில் அமைந்துள்ள பலாங்கொடை சீ.சீ. தமிழ் மகாவித்தியாலயம் க.பொ.த (உ / த ) பெறுபேறுகளுக்கமைய தொடர்ந்து பல மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்புவதில் சாதனைப்படைத்து வருகின்றது.
அந்தவகையில் கடந்த வருட பெறுபேறுகளுக்கமைய வரலாற்றின் முதல் தடவையாக இரு மாணவிகளான செல்வி சப்னா மதுசி, செல்வி கோகுல தர்சினி ஆகியோர் எமது பாடசாலையிலிருந்து சட்டத்துறைக்கு தெரிவாகியுள்ள அதே வேளை 14 மாணவர்கள் இம்முறை பல்கலைக்கழகத்திற்கு பல்வேறு புதிய கற்கை நெறிகளை தொடர்வதற்கு அனுமதிபெற்றுள்ளனர்.
1.செல்வி.சப்னா மதுஷி- சட்டம் (யாழ்ப்பாண பல்கலைக்கழகம்)
2.செல்வி.கோகுல தர்ஷனி – சட்டம்(யாழ்ப்பாண பல்கலைக்கழகம் )
3.செல்வி.சர்னிஜா – மனித வள மேம்பாடு (ஊவா பல்கலைக்கழகம் )
4.செல்வி.ரஞ்சனி – MIT
(தென்கிழக்கு பல்கலைக்கழகம் )
5.செல்வி.ஸ்ரீ வித்யா – தொடர்பாடல் கற்கை (கிழக்கு பல்கலைக்கழகம் )
6.செல்வி.துஷாரி – செயற்றிட்ட முகாமைத்துவம்(வவுனியா பல்கலைக்கழகம் )
7.செல்வி.லக்ஷிகா- கலை (யாழ்ப்பாண பல்கலைக்கழகம் )
8.செல்வி.சாலினி – கலை (கிழக்கு பல்கலைக்கழகம் )
9.செல்வி.மஞ்சுளா சுதர்ஷனி – நாடகமும் அரங்கியலும் (சுவாமி விவேகானந்தர்)
10.செல்வி.அனுஷா – கலை (கிழக்கு பல்கலைக்கழகம்)
11.செல்வன்.சொவான் தினுஷன் – கலை(யாழ்ப்பாண பல்கலைக்கழகம் )
12.செல்வி.பிரவீனா – கலை(கிழக்கு பல்கலைக்கழகம் )
13. செல்வி. நிலானி – கலை (யாழ்ப்பாண பல்கலைக்கழகம்)
14. செல்வி. தர்ஷிகா – கலை (கிழக்கு பல்கலைக்கழகம்)
மாணவர்களின் கல்வி நலனுக்காக பல ஆலோசனைகளை வழங்கி வரும் பலாங்கொடை வலயக்கல்வி பணிமனையின் கல்வி பணிப்பாளர், உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் எமது கல்லூரியின் முதல்வர், பாடசாலை ஆசிரியர்கள், உயர்தர பாடத்தினைகற்பித்த பாட ஆசிரியர்கள், பல்கலைக்கழகம் செல்லவுள்ள மாணவ செல்வங்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள், பெற்றோர்கள் ஆகியோருக்கு எமது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கின்றோம்.
அனைவரினதும் கூட்டு முயற்சியே பாடசாலை சமூகத்தின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் காரணமாகும்.
” இடையறாத முயற்சியும் பயிற்சியும் வெற்றிக்கு வழி வகுக்கும்”