வடமாகாணம் – மன்னார் மாவட்டம் மன்னார் எழுத்தூர் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்மன் திருக்கோயில்
தாயாக இருந்துலகைக் காக்கின்ற அம்மா
தளர்வில்லா நல்வாழ்வை எமக்களிக்க வருவாய்
தளராத மனவலிமை நாம் பெற்றுவாழ
அருளிடம்மா எழுத்தூரில் எழுந்தருளும் அகிலாண்டேஸ்வரி அம்மா
மங்காத பெருமையினைத் தருகின்ற அம்மா
மாசில்லா நல்வாழ்வை எமக்களிக்க வருவாய்
சீரான நல்வழியை நாம் பெற்றுவாழ
அருளிடம்மா எழுத்தூரில் எழுந்தருளும் அகிலாண்டேஸ்வரி அம்மா
மன்னார் பெரு நிலத்தில் உறைகின்ற அம்மா
மாண்புமிகு நல்வாழ்வை எமக்களிக்க வருவாய்
மகிழ்வு கொண்ட நல் வாழ்வை நாம் பெற்றுவாழ
அருளிடம்மா எழுத்தூரில் எழுந்தருளும் அகிலாண்டேஸ்வரி அம்மா
நல்வரங்கள் தந்தெம்மை வாழ்த்துகின்ற அம்மா
நிம்மதி நிறை நல்வாழ்வை எமக்களிக்க வருவாய்
நேர்மை கொண்ட நல்வாழ்வை நாம் பெற்றுவாழ
அருளிடம்மா எழுத்தூரில் எழுந்தருளும் அகிலாண்டேஸ்வரி அம்மா
தமிழ் ஒலிக்கும் திருநிலத்தில் கோயிலுறை அம்மா
திறமைமிகு நல்வாழ்வை எமக்களிக்க வருவாய்
துணிவு கொண்ட பெருவாழ்வு நாம் பெற்றுவாழ
அருளிடம்மா எழுத்தூரில் எழுந்தருளும் அகிலாண்டேஸ்வரி அம்மா
அச்சமில்லா மனநிலையை அருளுகின்ற அம்மா
அரண்கொண்ட நல்வாழ்வை எமக்களிக்க வருவாய்
அதர்மத்தை அழிக்கின்ற துணிவினை நாம் பெற்றுவிட
அருளிடம்மா எழுத்தூரில் எழுந்தருளும் அகிலாண்டேஸ்வரி அம்மா.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.