HTML tutorial

பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட யூரி மாப்பாகளைப் பகுதியில் துப்பாக்கியுடன் (shot gun) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பசறை ஆக்கரத்தன்னை பகுதியில் முகாமிட்டுள்ள விஷேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து யூரி மாப்பாகளைப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான இடத்தினை சுற்றிவளைப்பினை மேற்கொண்ட போது,சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரம் இன்றி சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி (short gun) ஒன்றினையும் துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 6 தோட்டாக்களும் கைப்பற்ற பட்டதோடு 54 வயதுடைய அதே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரையும் கைது விஷேட அதிரடி படையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபரையும் துப்பாக்கியையும் பசறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததோடு சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ராமு தனராஜா