தென்மாகாணம் – ஹம்பாந் தோட்டை மாவட்டம்- ஹம்பாந்தோட்டை- வில்மட்தெரு – அருள்மிகு கதிரேசன் திருக்கோயில்
தென்னிலங்கை கோயில் கொண்ட திருமுருகா அருள்தரவா
இன்னல் களைந்தெமக்கு நல்வாழ்வை உறுதி செய்வாய்
துன்பம் அண்டா நிலை தந்தெம்மை வாழவைப்பாய்
ஹம்பாந்தோட்டை உறை ஆறுமுகனே கதிரேசா
வேல் தாங்கி நின்றிருக்கும் வேல்முருகா அருள்தரவா
அல்லல் அணுகாத நல்வாழ்வை உறுதி செய்வாய்
வல்லமை தந்தெம்மை வளமாக வாழவைப்பாய்
ஹம்பாந்தோட்டை உறை ஆறுமுகனே கதிரேசா
ஆணவத்தை அடக்கிடவே அவதரிக்கும் திருமுருகா அருள்தரவா
ஆசை அறுத்தெமக்கு நல்வாழ்வை உறுதி செய்வாய்
ஆறுதலைத் தந்தெம்மை அனுதினமும் வாழவைப்பாய்
ஹம்பாந்தோட்டை உறை ஆறுமுகனே கதிரேசா
கோல மயில் மீதமர்ந்து குறைகளையும் திருமுருகா அருள்தரவா
குறையற்ற வாழ்வுதந்து நல்வாழ்வை உறுதி செய்வாய்
குற்றம் குறை பொறுத்தெம்மை குறையின்றி வாழவைப்பாய்
ஹம்பாந்தோட்டை உறை ஆறுமுகனே கதிரேசா
அன்னையர் இருவரையும் அருகு கொண்ட திருமுருகா அருள்தரவா
அச்சம் அகற்றியெமக்கு நல்வாழ்வை உறுதி செய்வாய்
அனைத்து நலன் தந்தெம்மை ஆதரித்து வாழவைப்பாய்
ஹம்பாந்தோட்டை உறை ஆறுமுகனே கதிரேசா
சிந்தையிலே இருந்தெமக்கு சீராக வழிகாட்டும் திருமுருகா அருள்தருவாய்
சிறப்பான வழியமைத்து நல்வாழ்வை உறுதி செய்வாய்
சீரான பெருவாழ்வு பெற்று உயர் நிலையில் வாழவைப்பாய்
ஹம்பாந்தோட்டை உறை ஆறுமுகனே கதிரேசா.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.